கனேடிய கடற்பரப்பில் இரசாயன கொள்கலன் கப்பல் தீப்பற்றியது

container ship trade 810x524 1
container ship trade 810x524 1

கனடாவின் வான்கூவர் தீவுக்கு அருகில் உள்ள கடற்பரப்பில் இரசாயன பொருட்கள் உடன் பயணித்த கொள்கலன் கப்பலொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

சுரங்கங்களுக்கான இரசாயன பொருட்களைக் கொண்டு செல்லும் மோல்டா நாட்டு கொடியுடன் பயணித்த என்.வீ. சிம் கிங்ஸ்டன் எனப்படும் கொள்கலன் கப்பலில் இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீப்பரவலுக்குள்ளான கப்பலிலிருந்து இதுவரையில் 16 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகக் கனேடிய கடற்படை தெரிவித்துள்ளது.

அத்துடன், மேலும் 5 பேர் குறித்த கப்பலில் இருப்பதுடன், தீப்பரவலை கட்டுப்படுத்துவதற்காக இழுவைப் படகுகளும், வானூர்தியொன்றும் உட்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.