சூடானில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் சுட்டுக் கொலை!

soooooooooooo
soooooooooooo

சூடானில் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றியவர்கள் மீது அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அத்துடன் 140 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரதமர் அப்துல்லா அமடொக் உள்ளிட்ட அமைச்சர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், மக்கள் ஆட்சி கலைக்கப்பட்டதாக இராணுவ தளபதி ஜென்ரல் அப்டெல் பற்றா பேஹான் நேற்று (25) அறிவித்தார்.

இதனால் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு சதிக்கு எதிராக சூடானில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் காட்டோமில் ஆயுதம் தரித்த பாதுகாப்பு படையினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.