அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்யும் உரிமை சீனாவுக்கு இல்லை: மடாலய தலைவர்

dalilama
dalilama

அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதில் சீனாவுக்கு எந்த அதிகாரமும் இல்லை. குறிப்பாக சீன அரசுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை என்பதாலும், திபெத்திய மக்களின் ஆன்மீக விவகாரம் என்பதாலும் இந்த நிலைமை என அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் மடத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான இந்தியாவின் எல்லைக்கு அருகில் உள்ள சுமார் 350 ஆண்டுகள் பழைமையான மடத்தின் மடாதிபதியான கியாங்பங் ரின்பேச் குறிப்பிடுகையில்,

பெய்ஜிங்கின் விரிவாக்கக் கொள்கையை எதிர்கொள்வது முக்கியம் என்றும், டெல்லி தனது எல்லையில் உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு மீது கடுமையான விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திபெத்தின் லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனைக்குப் பிறகு உலகின் இரண்டாவது பெரிய மடாலயத்தின் தலைவர், திபெத்திய ஆன்மீகத் தலைவரின் வாரிசு குறித்து முடிவெடுக்க தற்போதைய தலாய் லாமா மற்றும் திபெத்திய மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும், இந்த விடயத்தில் சீனாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சீன அரசுக்கு மதத்தில் நம்பிக்கை இல்லை. மதத்தில் நம்பிக்கை இல்லாத அரசு எப்படி அடுத்த தலாய் லாமாவை முடிவு செய்ய முடியும். வாரிசு திட்டம் என்பது மதம் மற்றும் நம்பிக்கை சார்ந்த விடயம். இது அரசியல் பிரச்சினை அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய தலாய் லாமா மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு மட்டுமே இந்த பிரச்சினையில் முடிவெடுக்க உரிமை உள்ளது.

சீனாவால் உரிமை கோரப்படும் பகுதியில் அமைந்துள்ள மடத்தின் மடாதிபதியின் கருத்துக்கள் கிழக்கு லடாக் எல்லையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் விரிசல் தீவிரமடைந்தது.

இந்தியா – அருணாச்சலப் பிரதேச மாநிலம் நாட்டின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். இந்த விவகாரத்தில் சீனா எடுக்கும் எந்த முடிவையும் திபெத்திய மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

திபெத்திய பாரம்பரியத்தை கைப்பற்றுதல், திபெத்திய மக்கள் மீது கட்டுப்பாட்டை கட்டவிழ்த்து விடல் பெய்ஜிங்கின் முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் திபெத் மக்களின் மனதை வெல்வது சீனாவுக்கு கடினமாக இருக்கும். திபெத்தை சீனா கடுமையாக கட்டுப்படுத்துகிறது.

வெளியில் இருந்து வருபவர்களை திபெத்தியர்களை சந்திக்கக்கூட அனுமதிப்பதில்லை. பல கட்டுப்பாடுகள் உள்ளன. எனவே இந்தியா போன்ற நாடுகள் ஆதரவளிப்பது முக்கியமாகும் என்றார்.