கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய திரிபு கண்டுப்பிடிப்பு

202108250556043045 A US intelligence report on how the Corona appeared will be SECVPF
202108250556043045 A US intelligence report on how the Corona appeared will be SECVPF

கர்நாடகாவில் கொரோனா தொற்றின் புதிய வைரஸான ஏ.வை 4.2 பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறித்த வைரஸ் தொற்றினால் இதுவரை ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதன்காரணமாக வெளிநாட்டில் இருந்து கர்நாடகாவுக்கு வருபவர்களுக்கு, வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு பெறப்பட்ட எதிர்மறையானஆர் டி- பிசிஆர் (RT-PCR) சோதனையை கட்டாயமாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பரவி வருகின்ற புதிய வைரஸ் திரிபுகளால் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.