அக்னி-5 ஏவுகணை பரிசோதனை வெற்றியடைந்துள்ளதாக அறிவிப்பு!

அக்னி 5 750x375 1
அக்னி 5 750x375 1

கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா அருகில் உள்ள அப்துல் கலாம் தீவில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றது.

இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ(DRDO) வடிவமைத்துள்ள இந்த ஏவுகணை அணு ஆயுதங்களை சுமக்கக் கூடியவையாகும்.

அருணாச்சல் உள்ளிட்ட கிழக்கு எல்லையில் சீன இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில், குறித்த ஏவுகணை பரிசோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.