இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 14,000க்கும் அதிகமானோருக்கு தொற்று!

vikatan 2021 05 cbaa163c a154 4281 962e 903b3a7a30d0 corona virus
vikatan 2021 05 cbaa163c a154 4281 962e 903b3a7a30d0 corona virus

இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் புதிதாக 14,348 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

இந்திய மத்திய சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொவிட்-19 தொற்றால் இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 42 இலட்சத்து 46 ஆயிரத்து 157 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் கொவிட்-19 தொற்றால் அங்கு 805 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவற்றில் 708 மரணங்கள் கேரளா மாநிலத்தில் பதிவாகியுள்ளன.

இதன்படி, கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 457,221 ஆக அதிகரித்துள்ளது.