ஆசியாவிலேயே அதிக அளவிலான போதைப்பொருட்கள் லாவோஸில் கைப்பற்றப்பட்டன!

heroin 630x420 1
heroin 630x420 1

ஆசியாவில் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய தொகை போதைப்பொருட்களை லாவோஸ் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது, மெதம்பெட்டமைன் அல்லது ஐஸ் எனப்படும் போதைப்பொருள் வகையைச் சேர்ந்த 55 மில்லியன் போதை மாத்திரைகள் மற்றும் 1, 300 கிலோ நிறையுடைய கிறிஸ்டல் மெத் எனப்படும் போதைப்பொருளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளதாக ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தென்கிழக்கு ஆசிய பிராந்திய காரியாலயத்தின் பிரதிநிதி ஜேரம் டக்ளஸ் தெரிவித்தார்.

தாய்லாந்து – மியன்மார் எல்லைப்பகுதியில் உள்ள பொகியோ பிரதேசத்தில் ட்ரக் ரக வாகனத்திலிருந்து இந்தப் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.