சர்வதேச ரீதியில் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 50 இலட்சத்தை கடந்தது

4 coronavirus1 1584949824 1585047469 1585392952 1
4 coronavirus1 1584949824 1585047469 1585392952 1

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தோரின் எண்ணிக்கை 50 இலட்சத்தைக் கடந்துள்ளது.

நேற்றைய தினம் 7,400 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் சர்வதேச ரீதியில் பதிவாகியுள்ளன.

இதற்கமைய, கொவிட்-19 தொற்றினால் மரணித்தோர் எண்ணிக்கை 50 இலட்சத்து 3 ஆயிரத்து 800 ஐ கடந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகளாவிய ரீதியில் அதிக கொவிட் மரணங்கள் அமெரிக்காவில் பதிவாகியுள்ளன.

அங்கு இதுவரையில் 7 இலட்சத்து 65 ஆயிரத்து 620 பேர் மரணித்துள்ளனர்.

பிரேஸிலில் 6 இலட்சத்து 7 ஆயிரத்து 504 மரணங்களும், இந்தியாவில் 4 இலட்சத்து 57 ஆயிரத்து 773 மரணங்களும் பதிவாகியுள்ளன.

மெக்ஸிகோவில் 2 இலட்சத்து 87 ஆயிரம் மரணங்களும், ரஷ்யாவில் 2 இலட்சத்து 36 ஆயிரம் மரணங்களும் பதிவாகியுள்ளன.

இதன்படி சர்வதேச கொவிட் மரணங்களில், 20 இலட்சத்துக்கும் அதிகமானவை மேற்குறிப்பிட்ட ஐந்து நாடுகளிலும் பதிவாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.