அபிவிருத்தி அடைந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்கு எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் 200 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாகக் கனடா அறிவித்துள்ளது.
ஜீ-20 மாநாட்டில் வைத்து கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதனைத் தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக 10 மில்லியன் மொடர்னா தடுப்பூசிகள் விரைவாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தத் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இதேவேளை, தென்னாப்பிரிக்காவில் கொவிட்-19 தடுப்பூசி உற்பத்திகளை அதிகரிப்பதற்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளதாகவும் கனடா உறுதியளித்துள்ளது.
மொடர்னா நிறுவனம், அமெரிக்காவில் மாத்திரமின்றி கனடாவிலும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையொன்றை நிர்மாணிக்கத் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.