உலகின் முன்னணி நாடுகள் தமது இலாபத்தில் 15 சதவீதத்தை வரியாகச் செலுத்த இணக்கம்!

unnamed 15
unnamed 15

உலகின் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள 20 நாடுகளின் தலைவர்கள், பாரிய அளவில் வர்த்தக நடவடிக்கைகள் ஊடாகப் பெறப்படும் இலாபத்தில் 15 சதவீதத்தை வரியாகச் செலுத்தும் விடயத்திற்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

இது தொடர்பான இறுதி முடிவு இன்று(31) எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோமில் நடைபெறும் ஜீ20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்ட சகல தலைவர்களும் இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் கொவிட் வைரஸ் தொற்று மற்றும் காலநிலை மாற்றம் என்பன குறித்தும் கவனம் செலுத்தப்படுகின்றது.

இந்நிலையில், ஜீ20 மாநாட்டில் கலந்து கொள்ளும் அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, ஜீ20 நாடுகளில் இல்லாத ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகள் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.