காடழிப்பை முடிவுக்கு கொண்டுவர காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் தீர்மானம்!

download 5 150x150 1
download 5 150x150 1

2030 ஆம் ஆண்டுக்குள் காடழிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில், 100 இற்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் இணங்குவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில், ஏற்படுத்தப்படவுள்ள முதலாவது மிகப்பெரிய ஒப்பந்தம் இதுவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உறுதிப்பாட்டில், 19.2 பில்லியன் டொலர் பொது மற்றும் தனியார் நிதி உள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நகர்வை வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், 2014இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, காடழிப்பை மெதுவாக்குதல் தோல்வியடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, உறுதிமொழிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.