ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரை சந்தித்ததால் மோடி மகிழ்ச்சி!

setanta sports 1 1
setanta sports 1 1

கிளாஸ்கோவில் நடைபெற்ற கோப்26  மாநாட்டின்  26 வது அமர்வில் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயனுடனான சந்திப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதன் போது இருதரப்பு கலந்துரையாடல்களில் கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, ரோமில் மிகவும் பயனுள்ள உரையாடலுக்குப் பிறகு கிளாஸ்கோவில் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 

நிலையான வளர்ச்சிக்கான எந்தவொரு முயற்சியையும் இந்தியா எப்போதும் வலுப்படுத்தும்’ என்று பிரதமர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் பிரதமர் மோடியின் தலைமைத்துவத்தை பாராட்டியதுடன், உலகளாவிய காலநிலையை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா முக்கிய பங்குதாரர் என்றும் கூறினார்.

பிரதமர் நரேந்திர மோடி கோப் 26 உடனான நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்வது நல்லது. உலகளாவிய காலநிலையை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஒரு முக்கிய பங்காளியாக உள்ளதாக இதன் போது  பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.