சியேரா லியோனில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 90க்கும் அதிகமானோர் பலி! 100 பேர் காயம்

121459990 mediaitem121459987
121459990 mediaitem121459987

மேற்கு ஆபிரிக்க நாடான, சியேரா லியோன் தலைநகர் ஃப்ரீடவுன் பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்தியொன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் 90க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 100க்கும் அதிகமானோர் காயமடைந்ததுடன் அவர்களில் பலரினது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சியேரா லியோன் தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ப்ரீடவுனுக்கு கிழக்காகவுள்ள புறநகரான வெலிங்டனில் எரிபொருளை ஏற்றிச்சென்ற தாங்கி ஊர்தியொன்று பேருந்தொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதையடுத்து, இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் ஏற்பட்ட தீ அருகிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு பரவியுள்ளது.

பிந்திக் கிடைத்த தகவல்களுக்கமைய, இதுவரையில் 92 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 100க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும், சியேரா லியோன் தேசிய அனர்த்த முகாமைத்துவ முகவரகம் தெரிவித்துள்ளது.