காலநிலை மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரி போராட்டம்

climate change al gore climate activists
climate change al gore climate activists

காலநிலை மாற்றம் குறித்து மேலும் நடவடிக்கை எடுக்கக்கோரி, க்ளாஸ்கோவில், சுமார் ஒரு இலட்சம் பேர் பேரணியில் ஈடுபட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி க்ளாஸ்கோவில் ஆரம்பமான, கொப்26 எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு, எதிர்வரும் 12 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், காலநிலை மாற்றம் குறித்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கை போதுமானதல்ல எனத் தெரிவித்து க்ளாஸ்கோவில் குறித்த பேரணி நடத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும், இது போன்ற பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ளாஸ்கோவில் இடம்பெற்ற பேரணியின்போது, க்ளைட் பாலத்தினை இடைமறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் 21 விஞ்ஞானிகளை, காவல்துறையினர் கைது செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.