லிபிய வெளிவிவகார அமைச்சர் பதவி நீக்கம்

3500
3500

லிபிய வெளிவிவகார அமைச்சர் நஜ்லா மங்கூஸ் (Najla Mangoush) பதவி நீக்கப்பட்டுள்ளார்.

வெளிவிவகார கொள்கைகளை மீறியமைக்காக அந்நாட்டின் ஜனாதிபதி செயலணியினால், அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், விசாரணைகள் நிறைவுறும்வரை, வெளிநாடு செல்வதற்கும் அவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் 6 வாரங்களில் லிபியாவில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சரின் குறித்த பதவி நீக்கமானது அங்கு அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றன.