இந்தியாவில் 33 இலட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிப்பு

thumb
thumb

இந்தியாவில் 33 இலட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 14 ஆம் திகதி வரையான நிலவரப்படி, இந்திய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இதனைத் தெரிவித்துள்ளதாக அந்த நாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

அவர்களில், 17 இலட்சத்து 76 ஆயிரம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 927,000 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், ஓராண்டில், இந்த எண்ணிக்கை 91 சதவீதம் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில வாரியாக அவதானிக்கையில், அதிகளவான குழந்தைகள் மராட்டிய மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

616,000 குழந்தைகள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகார், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு முதலான மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

தமிழ்நாட்டில் 178,000 குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.