2020 ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை !

newborn
newborn

உலகில் புத்தாண்டு தினத்தை மக்கள் கொண்டாடி வரும் நிலையில், இந்த புத்தாண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு 12.01-க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜாவில் இருக்கும் சஹ்ரா மருத்துவமனையில் 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ஆம் திகதி 12.01 மணிக்கு ஹலீமா ஹாசன் அழ ஷம்சி மற்றும் வலீத் ஜுமா அழ முஹைரி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இவர்கள் அந்த குழந்தைக்கு ஹாசன் என்று பெயர் வைத்ததாக கூறப்படுகிறது. இது 2020-ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த முதல் குழந்தை, அதே போன்று இரண்டாவது பிறந்த குழந்தையும் ஆண் குழந்தை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.