மெக்ஸிக்கோவில் இரண்டு பாரவூர்திகளில் மறைந்திருந்த 600 ஏதிலிகள் மீட்பு

211114042310XGHJ
211114042310XGHJ

மெக்ஸிக்கோவில் இரண்டு பாரவூர்திகளில் மறைந்திருந்த 600 ஏதிலிகளை அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளனர்.

குறித்த 600 பேரும் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய 455 ஆண்களும் 145 பெண்களும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் குவாட்டமாலாவை சேர்ந்த 401 பேரும், பங்களாதேஷை சேர்ந்த 27 பேரு, இந்தியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குகின்றனர்.

இதுதவிர, ஹொண்டுராஸ், டொமினிக்கன், நிக்கரகுவா, எல்-சல்வடோர், கியூபா மற்றும் ஈக்குவடோர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் அவர்களில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த நாடுகளில் உள்ளவர்கள் மெக்ஸிக்கோ வழியாக மத்திய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை நோக்கி நகர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.