ஒமிக்ரொன் கொவிட் திரிபு தொடர்பில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

World Health Organization Logo
World Health Organization Logo

ஒமிக்ரொன் திரிபு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள கொரோனா திரிபான ‘ஒமிக்ரொன்’ தென் ஆபிரிக்காவில் கண்டறியப்பட்டது.

இந்தப் புதிய வகை வைரஸ் காரணமாக உலகின் பல்வேறு நாடுகள் தென் ஆபிரிக்கா உட்பட சில நாடுகளுக்கு பயணத்தடை விதித்தது.

இந்நிலையில், ஒமிக்ரொன் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு கூறுகையில், “புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரொன் வைரஸ் திரிபான மிகவும் வேகமாக பரவுமா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.

அதேபோல், வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா மற்றும் பிற வகை கொரோனா வைரஸ் திரிபுகளுடன் ஒப்பிடும் போது இந்த வைரஸ் வேகமாக பரவுவதுடன், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உறுதி செய்ய இதுவரை எந்தவித தரவுகளும் வெளியிடப்படவில்லை.

ஒமிக்ரொன் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா? என்பது குறித்து இதுவரை எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை. அத்துடன், ஒமிக்ரோன் திரிபுக்கான அறிகுறிகள் பிற வைரஸ்களின் அறிகுறிகளுடன் மாறுபட்டவை என்பதை உறுதி செய்ய எந்தவித தகவல்களும் இல்லை’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.