பிரசவத்திற்கு சைக்கிளில் சென்ற நிறைமாத கர்ப்பிணியான பெண் நாடாளுமன்ற உறுப்பினர்!

20170617 092132 2
20170617 092132 2

நிறைமாத கர்ப்பிணியான நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலைக்கு சைக்கிளிலில் பயணம் செய்து குழந்தையை பிரசவித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

நியூசிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரான நிறைமாத கர்ப்பிணி ஜூலி ஆன் ஜென்டர் நேற்றுக் காலை பிரசவ வலி ஏற்பட்டதால் சைக்கிள் ஓட்டியே வைத்தியசாலைக்குச் சென்றுள்ளார். அவருக்கு ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்துள்ளது.

இது தொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி ஆன் ஜென்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது,

இன்று அதிகாலை 3:04 மணிக்கு எங்கள் குடும்பத்தின் முக்கிய உறுப்பினரை நாங்கள் வரவேற்றுள்ளோம்.

பிரசவத்தின் போது, நான் சைக்கிளை ஓட்ட வேண்டும் என திட்டமிடவில்லை. ஆனால், அப்படி நடந்து விட்டது.

வைத்தியசாலைக்கு செல்வதற்காக அதிகாலை 02.00 மணிக்கு எழுந்த போது, பிரசவ வலி அவ்வளவு மோசமாக இல்லை.

வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு செல்ல 2 – 3 நிமிடங்கள் ஆகும். இருந்த போதும், அங்கு சென்ற 10 நிமிடங்களில் பிரசவ வலி அதிகரித்தது. எங்களுக்கு நல்ல ஆரோக்கியமான, மகிழ்ச்சியான குழந்தை பிறந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு, தனது முதல் பிரசவத்தின் போதும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலி ஆன் ஜென்டர், சைக்கிளில் வைத்தியசாலைக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.