இந்தியாவில் ஒமிக்ரொன் தொற்றாளர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை

5vv
5vv

புதிய ஒமிக்ரொன் வைரஸ் திரிபால் தொற்றுதியான எவரும் இந்தியாவில் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையென சுகாதார அமைச்சர் மன்சுச் மண்டவியா தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் இன்று(30) கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சந்தேகத்திற்கிடமான புதிய தொற்றுகள் குறித்து சுகாதார தரப்பினர் மாதிரி பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது வளங்களும், ஆய்வகங்களும் அதிகளவில் உள்ளன.

எந்த சூழ்நிலையையும் தம்மால் முகாமைத்துவம் செய்ய முடியும் என சுகாதார அமைச்சர் மன்சுச் மண்டவியா தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், இந்தியாவில் ஏற்கனவே ஒமிக்ரொன் திரிபு பரவி இருக்க வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் தொற்று நோய் துறை தலைவர் சாமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

நவம்பர் 9 ஆம் திகதி தென்னாபிரிக்காவில் ஒமிக்ரொன் திரிபு கண்டறியப்பட்டது.

அங்கிருந்து வந்த பயணிகள்மூலம் ஒமிக்ரொன் திரிபு இந்தியாவில் பரவியிருக்க வாய்ப்புள்ளது.

பாதிக்கப்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தும்போதுதான் இது தெரியவரும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் தொற்று நோய் துறை தலைவர் சாமிரன் பாண்டா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.