6 இலட்சத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்!

202006200931212323 Tamil News UN India will head the Security Council SECVPF 1
202006200931212323 Tamil News UN India will head the Security Council SECVPF 1

கடந்த 5 ஆண்டுகளில் 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மக்களவையில் நேற்று(30) எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தபோதே இதனைத் தெரிவித்தாரென இந்திய ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

2017 முதல் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதிவரையில் 6 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்தியக் குடியுரிமையை துறந்துள்ளனர்.

அதேநேரம், கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த 10,645 பேர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 227 அமெரிக்கர்களும் 7,782 பாகிஸ்தானியர்களும், 795 ஆப்கானிஸ்தானியர்களும், 184 பங்களாதேஷினரும் அடங்குகின்றனர்.

விண்ணப்பித்தவர்களில் 4,177 பேருக்குக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், வெளிநாடுகளில் 1 கோடியே 33 இலட்சத்து 83 ஆயிரத்து 718 இந்தியர்கள் வசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்