ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிப்பு!

1638773235 1638772194 Aung San Suu Kyi L
1638773235 1638772194 Aung San Suu Kyi L

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொவிட் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

76 வயதான அவர் பெப்ரவரியில் இராணுவப் புரட்சி மூலம் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனையடுத்து, ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுடன், பல ஊழல் குற்றச்சாட்டுகள், உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறுதல் மற்றும் பொது அமைதியின்மையை தூண்டுதல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

அவர்மீதான 11 குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.