சீனாவில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்கும் அமெரிக்கா!

chinabehindamerica
chinabehindamerica

அடுத்த ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை ராஜதந்திர ரீதியாக புறக்கணிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து அமெரிக்கா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

எனவே, போட்டிகளுக்கு உத்தியோகப்பூர்வ பிரதிநிதிகள் யாரும் அனுப்பப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்க வீரர் குறித்த போட்டிகளில் பங்குகொள்ளலாம் எனவும் அதற்கான முழு ஆதரவும் வழங்கப்படும் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ராஜதந்திர ரீதியான புறக்கணிப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்குமாயின் அதற்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சீனா முன்னர் அறிவித்திருந்தது.

இந்தநிலையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஜென் சாகி அமெரிக்கா, சீனாவில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.