பிளாஸ்மாவை பயன்படுத்தி கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடாது!

6dff6c46 5279f1c1 who 850x460 acf cropped
6dff6c46 5279f1c1 who 850x460 acf cropped

கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தில் இருந்து பெறப்படும் பிளாஸ்மா என்ற அயனிமத்தை பயன்படுத்தி கொவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்கை வழங்கக்கூடாதென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த சிகிச்சை முறைமையினூடாக கொவிட்-19 தொற்று உறுதியானவர்களுக்கு சிறந்த பெறுபேறுகள் வெளிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தொற்றிலிருந்து குணமடைந்தோரிடம் இருந்து பெறப்படும் அயனிமத்தில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகின்றமை தெரியவந்தது.

எவ்வாறாயினும் தற்போது இந்த முறைமையில் உயிர் பாதுகாப்பு அதிகரிக்கவில்லையென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அதனை செயற்படுத்துவதற்கான செலவு மற்றும் நேரம் அதிகமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய தீவிர கொவிட்-19 நோய்நிலைமை இல்லாதவர்களுக்கு இரத்த அயனிமத்தை பயன்படுத்துவதற்கு எதிராக இந்த பரிந்துரை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தீவிர நோய் நிலைமை உடையவர்களுக்கு மருத்துவ பரிசோதனையின் ஒரு பகுதியாக மாத்திரம் இதனை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.