தமிழகத்தில் குன்னுாரில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் இந்திய பாதுகாப்பு தலைமை அதிகாரி பிபின் ராவத், அவரின் மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கெப்டன் வருண் சிங் என்பவர், குன்னூர் இராணுவ மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் – குன்னூர் வெலிங்க்டனில் இன்று(8) இடம்பெறவிருந்த இராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய பாதுகாப்பு தலைமை அதிகாரி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு விமானிகள் உட்பட 14 பேர் உலங்கு வானூர்தியில் வெலிங்க்டன் நோக்கிப் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் குன்னுார் மலைப்பாதையில் உள்ள பள்ளத்தாக்கொன்றின் மேலே பயணித்த போது ஏற்பட்ட காலநிலை மாற்றம் காரணமாக, குறித்த உலங்கு வானூர்தி கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து எரிந்தததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.