அவுஸ்திரேலியாவில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் பலி!

1639655911 8970762 hirunews
1639655911 8970762 hirunews

அவுஸ்திரேலியாவில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தொன்றில் 5 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காற்று நிரப்பப்பட்ட விளையாட்டு உபகரணமொன்று தனது கட்டுப்பாட்டை இழந்ததால் குழந்தைகள் அதிலிருந்து தரையில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென வீசிய அதிவேகமான காற்று காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களில் 10 – 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் அடங்குவதாக குறிப்பிடப்படுக்கிறது.

இந்த விபத்தில் சிறுவர்கள் சுமார் 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளனர்.

அத்துடன், குறித்த சம்பவம் தொடர்பில் அவுஸ்திரேலிய பிரதமர் வருத்தம் தெரிவித்துள்ளார்.