குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவிப்பு!

putin
putin

அடுத்த ஆண்டு சீனாவில் இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்வதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீனா ஜனாதிபதி ஷீ ஜின்பிங்குடன் தொலை காணொளி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை உறுதிப்படுத்தியதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிப்பதாக பல முன்னணி நாடுகள் அறிவித்துள்ள நிலையில் ரஷ்யா தமது தீர்மானத்தை அறிவித்துள்ளது.

சீனாவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் நாடுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

எவ்வாறாயினும் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்துள்ளது.

இந்தநிலையில் விளையாட்டு மற்றும் ஒலிம்பிக் போட்டிகளை அரசியல் மயமாக்கும் முயற்சிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

சர்வதேச விளையாட்டு போட்டிகளில் ஒருவரை ஒருவர் ஆதரிக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.