ஜேம்ஸ் வெப் ரக தொலைநோக்கி விண்வெளிக்கு ஏவப்பட்டது!

thumb queen 2
thumb queen 2

10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஜேம்ஸ் வெப் ரக தொலைநோக்கி விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது.

பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்களை மிக துல்லியமாக இந்த தொலைநோக்கியின் ஊடாக பார்வையிடுவதுடன் பல புதிய தகவல்களையும் பெற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பிரெஞ் குயன்னா ஏவுகனை தளத்தில் இருந்து ஏவப்பட்ட தொலைநோக்கி வெற்றிகரமாக 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்து உரிய இலக்கை சென்றடைந்துள்ளதாக கென்யாவில் உள்ள மலிண்டி நிலையத்திற்கு சமிக்ஞை கிடைத்துள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் கனேடிய விண்வெளி அமைப்புக்களின் பொறியியல் விஞ்ஞானிகளால் வடிவமைத்து உருவாக்கப்பட்ட இந்த தொலைநோக்கி, தற்போது பாவனையில் உள்ள தொலைநோக்கிகளை விட 100 மடங்கு திறனை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொலைநோக்கியினை உருவாக்க கடந்த 30 வருடங்களாக ஏராளமானவர்கள் செயல்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13.5 வருட பழமை வாய்ந்த எப்போச் என்ற நட்சத்திரம் குறித்த மேலதிக தகவல்களையும் இதனூடாக பெறமுடியும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.