பெண்களுக்கு கல்வி மறுப்பு என்பது ஆப்கான் கலாசாரத்தின் அம்சம் – இம்ரான் கான்

730257 3425631 PM Imran updates
730257 3425631 PM Imran updates

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன. அவர்களால் கல்வி கற்க மட்டுமல்ல, வீட்டை விட்டு வெளியே கூட செல்லக் கூடாது என்ற அளவிற்கு கட்டுபாடுகள் உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உலகளாவிய மனித உரிமை அமைப்புகள், 2021 ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாகும் என கூறியுள்ளனர்.

அங்கு பெண்கள் அலுவலகம் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், சர்வதேச அரங்கில் தலிபான்களின் உண்மை முகம் வெளிப்படும் வகையில், காபூல் நகரில் கடை முகப்புகளில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்தும், அதை கடைகளில் இருந்து அகற்றும் படங்களும் வெளியாகின.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆப்கானிஸ்தான் பெண்கள் தொடர்பாக வெறுப்பு கருத்து தெரிவித்ததற்காக உலகளவில் ட்ரோல் செய்யப்பட்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்கத்திய அரசாங்கங்களின் பிரதிநிதிகள், “பெண்களுக்கு கல்வி கற்பிக்காதது ஆப்கான் கலாசாரத்தின் ஒரு அம்சம்” என்ற இம்ரான் கானின் கருத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள்” என்று அல் அரேபியா போஸ்ட் தெரிவித்துள்ளது.

சில மாதங்கள் முன்னதாக, காபூல் நகராட்சியின் செய்தித் தொடர்பாளர் நெமதுல்லா பராக்சாய், காபூலில் உள்ள கடைகள் மற்றும் வணிக மையங்களின் விளம்பர பதாதைகளிலுள்ள பெண்களின் அனைத்து புகைப்படங்களையும் அகற்றுமாறு நகராட்சி அதிகாரிகளுக்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

“அரசாங்கத்தின் முடிவின் அடிப்படையில், இஸ்லாமிய விதிமுறைகளுக்கு எதிரான வகையில் பெண்கள் படங்களை வைத்திருக்க கூடாது. பெண்கள் உள்ள விளம்பர பலகைகள் அகற்றப்படும். விதியை மீறுபவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும்” என்று பராக்சாய் கூறினார்.