‘குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் அடுத்த மாதம் – 20 இலட்சம் பேருக்கு கொவிட் பரிசோதனை

625658
625658

குளிர்கால ஒலிம்பிக்’ போட்டிகள் அடுத்த மாதம் 4 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் பிரதேசத்தை அண்டியுள்ள 20 இலட்சம் மக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக பீஜிங் நகர அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சில போட்டியாளர்கள், சர்வதேச குழுவினர் மற்றும் ஊடகவியலாளர் என பல தரப்பிருனம் ஏற்கனவே அங்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

தலைநகர் பீஜிங்கில் கடந்த வாரத்தில் 34 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போட்டி நடைபெறவுள்ள பிரதேசத்தைச் சூழவுள்ள பிரதேசங்களில் சிறிய அளவில் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டதனை அடுத்தே கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

அண்மையில் பீஜிங்கில் ஏற்பட்ட தொற்று, வெளிநாட்டு தபால் பொதிகள் ஊடாக பரவியுள்ளதாக தெரியவந்ததை அடுத்து, பொதிகளை பெறும் முன்னர் தொற்று நீக்கம் செய்யுமாறு அஞ்சல் ஊழியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர்.