அமெரிக்காவிலிருந்து மேலும் சில துருப்பினர்கள் ஐரோப்பாவிற்கு

NYT US Troops Afghanistan
NYT US Troops Afghanistan

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த வாரம் மேலும் துருப்பினர்களை ஐரோப்பாவிற்கு அனுப்ப உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

வடக்கு கரோலினாவில் இருந்து 2,000 துருப்பினர் ஜேர்மன் மற்றும் போலாந்து ஆகிய இடங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

ஏற்கனவே, ஜேர்மனியில் உள்ள ஆயிரம் துருப்பினரை ருமேனியாவுக்கு அனுப்புவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பை ரஷ்யா மறுத்துள்ள போதிலும் அதன் எல்லைப் பகுதியில் ஒரு இலட்சம் துருப்பினரை நிலை நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவினால் அனுப்பப்படுகின்ற துருப்பினர் சண்டையிடமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமெரிக்க நட்பு நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இவ்வாறு துருப்பினர் அனுப்பப்படுவதாக பென்டகன் அறிவித்துள்ளது