யுக்ரேனை ஆக்கிரமித்தால் ஜேர்மனிக்கான ரஷ்யாவின் எரிவாயு குழாயை மூடுவதாக பைடன் எச்சரிக்கை!

211007054346 nord stream pipeline russia 060519 file medium plus 169
211007054346 nord stream pipeline russia 060519 file medium plus 169

ரஷ்யா, யுக்ரேனை ஆக்கிரமித்தால் ஜேர்மனிக்கான ரஷ்யாவின் எரிவாயு குழாயை மூடுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

ஜேர்மன் சான்ஸ்லர் ஒலாஃப் ஸ்கோல்ஸூடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து கலந்துரையாடுவதன் மூலம் போரை தவிர்க்க முடியும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் நம்பிக்கை வெளியிட்டிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக மேற்கத்தேய நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. எவ்வாறாயினும் ரஷ்யா இதனை மறுக்கின்றது. முழு அளவிலான படையெடுப்புக்கு தேவையான 70 சதவீத பாதுகாப்பு துருப்பினரை ரஷ்யா திரட்டியுள்ளதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த பின்னணியில் யுக்ரேன் நேட்டோ உறுப்பினராவதை நிறுத்துமாறும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ படையினரின் எண்ணிக்கையை குறைக்குமாறும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

எவ்வாறாயினும் இந்த இரண்டு கோரிக்கைகளையும் நேட்டோ நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது