யுக்ரைன் நெருக்கடியை தீர்க்க இராஜதந்திர அணுகுமுறை உதவியாக இருக்குமென ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை!

download 15
download 15

யுக்ரைன் மீதான நெருக்கடியை தணிப்பதற்கு இராஜதந்திர அணுகுமுறை உதவியாக இருக்கும் என தாம் தற்போதும் நம்புவதாக ரஷ்யாவுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா எவரையும் ஆக்கிரமிக்கும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என்பதுடன், ரஷ்யாவின் எண்ணத்தை மாற்றுவதற்கு எவரும் தூண்டக் கூடாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

யுக்ரைன் எல்லைப்பகுதியில் ஒரு இலட்சம் ரஷ்ய துருப்பினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் தொடர்ந்தும் அங்குப் பரபரப்பு நிலவி வருகின்றது.

ரஷ்யா, யுக்ரைன் மீது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.

எனினும், இந்த குற்றச்சாட்டினை ரஷ்யா தொடர்ந்தும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது