யுக்ரைனுக்கு அதிகளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக அமெரிக்கா தெரிவிப்பு

123262717 gettyimages 1238405184
123262717 gettyimages 1238405184

யுக்ரைன் எல்லையில் மேலும் 7,000 ரஷ்ய துருப்பினர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.

யுக்ரைன் எல்லைப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்த துருப்பினர்களில் பெரும்பாலானவர்கள் மீள பெறப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா, யுக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில், தொடர்ந்தும் போலியான தகவல்களை வெளியிட்டு வருகின்றது.

இதனால் யுக்ரைனுக்கு அதிகளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலவுவதாக அமெரிக்க பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் குற்றச்சாட்டுக்களை ரஷ்யா தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.