அமெரிக்காவில் இதுவரை 13 மில்லியன் சிறுவர்களுக்கு கொவிட் தொற்று உறுதி

202012091852467873 Tamil News tamil news Corona infects 1232 new people in Tamil Nadu SECVPF
202012091852467873 Tamil News tamil news Corona infects 1232 new people in Tamil Nadu SECVPF

கொவிட்-19 பரவல் ஆரம்பித்தது முதல் தற்போது வரையில், அமெரிக்காவில் 13 மில்லியன் சிறுவர்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக புதிய அறிக்கைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க சிறுவர் மருத்துவ சங்கம் மற்றும் குழந்தைகள் மருத்துவ கலைக்ககூடத்தின் அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதக வெளிநாட்டு ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த நான்கு வாரங்களில், ஒரு இலட்சத்து 49 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.

2022ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 5 மில்லியன் பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மொத்த கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில், சிறார்களின் எண்ணிக்கை 19 சதவீதமாகும்.

கடந்த 28ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வாரத்தில், 53,000 சிறார்களுக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில், இது 60 சதவீத அதிகரிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது