கனடா பிரதமர் யுக்ரைனுக்கு விஜயம்

202109072207581798 Canada elections Prime Minister Justin Trudeau hit by SECVPF
202109072207581798 Canada elections Prime Minister Justin Trudeau hit by SECVPF

கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ருடோ, யுக்ரைனுக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 2 மாதங்களுக்கு மேலாக இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் நிலையில், கனடா பிரதமரின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களை நடத்தி வரும் யுக்ரைனுக்கு கனடா, பிரித்தானியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றன.

இந்தநிலையில், கடுமையான போர் யுக்ரைனில் நடந்து வரும் சூழலில் கனடா பிரதமர் யுக்ரைனுக்கான விஜயத்தினை மேற்கொண்டு அந்த நாட்டு ஜனாதிபதி வொளெடிமிர் செலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இது தற்போது சர்வதேச அரங்கில் அதிகளவில் பேசப்பட்டு வருவதாக சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றன