அமெரிக்கா – சிக்காக்கோ நகரில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி!

american 839775 1920
american 839775 1920

அமெரிக்கா – சிக்காகோவில் சுதந்திர தின அணிவகுப்பின்போது நடத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஒருவரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 22 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

ஹைலேண்ட் பார்க் நகரில், உயர் ஆற்றல் கொண்ட துப்பாக்கியை பயன்படுத்தி அவர் தாக்குதல் நடத்தியபோது 6 பேர் கொல்லப்பட்டதுடன் 24 பேர் காயமடைந்தனர்.

இந்தநிலையில், 2022 ஆம் ஆண்டின் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அமரிக்காவில் பதிவாகியுள்ளன.

இது குறித்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அணிவகுப்பு தொடங்கிய சில நிமிடங்களில், இந்த துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி ஏந்தியவர், கட்டடம் ஒன்றின் மேற்கூரையில் இருந்து பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் மற்றையவர் மருத்துவமனையில் அனுமதிப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.