போராட்டத்துக்கு படையினர் இடமளிக்கவேண்டும் – அமெரிக்காவின் கோரிக்கை!

22 62bbc6e0d430b
22 62bbc6e0d430b

“வன்முறை ஒரு தீர்வாகாது. நீங்கள் போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்றால், தயவு செய்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள்“ என்று அமெரிக்க துாதுவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ருவிட்டரில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

“மேலும் அமைதியான போராட்டக்காரர்களுக்கு இராணுவம் மற்றும் காவல்துறையினர் இடமளிக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று நினைவூட்டுகிறேன்“

“குழப்பமும், பலப்பிரயோகமும் தற்போதைய நிலையில் இலங்கையர்களுக்கு பொருளாதாரம் அல்லது அரசியல் ஸ்திரத்தன்மையை கொண்டு வராது” என்றும் ஜூலி சங் தமது ருவிட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார்.