ரஷ்ய கருங்கடல் கடற்படை தலைமையகம் மீது ஆளில்லா விமான தாக்குதல்

images 2
images 2

செவஸ்டோபோல் நகரிலுள்ள ரஷ்ய கருங்கடல் கடற்படை தலைமையகம் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவில் கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தம் ஆரம்பித்து 150 நாட்களை கடந்துள்ள நிலையில் குறித்த யுத்தத்தில் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை துறைமுகம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

இந்த நிலையில் கருங்கடலில் நங்கூரமிட்டுள்ள ரஷ்ய யுத்த கப்பல்கள் யுக்ரைன் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட யுக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தில் உள்ள செவஸ்டோபோல் நகரில் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படை தலைமையகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.