30,000 க்கும் மேற்பட்ட தினசரி தொற்றாளர்களுடன் புதிய உச்சத்தை எட்டியது சீனா!

realistic coronavirus background 52683 35109 1
realistic coronavirus background 52683 35109 1

கொவிட்-19 தொற்றின் தொடக்கத்திலிருந்து சீனாவில் பதிவான தினசரி தொற்றாளர் எண்ணிக்கை நேற்று(24) வழமைக்கு மாறாக மிக உயர்ந்த தொகையை பதிவுசெய்துள்ளது

இதனால், பொது முடக்கம், வெகுஜன சோதனை மற்றும் பயணக் கட்டுப்பாடுகள் மூலம் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, நேற்றைய தினம் சீனாவில் 31,454 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் 27,517 பேர் அறிகுறிகள் இல்லாத தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தேசிய சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.