இத்தாலியில் துப்பாக்கிச் சூடு: 3 பெண்கள் உயிரிழப்பு – நால்வர் காயம்!

download 2
download 2

இத்தாலியில் அடையாளம் தெரியாத ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பெண்கள் உயிரிழந்ததுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தலைநகர் ரோமில் நேற்று (11) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.குடியிருப்புத் தொகுதியொன்றில் வசிப்பவர்களுக்கான கூட்டமொன்றின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்களில் ஒருவர் தனது நண்பர் என இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 57 வயதான குளோடியோ கெம்பி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.