பறவை காய்ச்சலால் பீடிக்கப்பட்ட முதலாவது நபர் சிலியில் அடையாளம்!

download 1
download 1

பறவைக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட முதல் மனிதர், சிலியில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, கடுமையான காய்ச்சல் அறிகுறிகளை கொண்ட 53 வயதான ஒருவருக்கு இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், நோயாளி ஆபத்தான நிலையில் இல்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

தொற்றாளருடன் தொடர்பில் இருந்த ஏனையோர் தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

சிலியில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் இருந்து காட்டு விலங்குகளிடையே H5N1 எனப்படும் பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டு வருகிறது.

இதனால் பண்ணைகளிலிருந்து கோழிகளை ஏற்றுமதிசெய்வதையும் நிறுத்துவதற்கு அரசாங்கத்தை தீர்மானித்தது.

அத்துடன், ஆர்ஜென்டினாவிலும் பறவை காய்ச்சல் தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ள போதிலும்,உலகின் மிகப்பெரிய கோழி ஏற்றுமதியாளரான பிரேசிலில் தொற்றுகள் பதிவாகியிருக்கவில்லையென ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இந்த வைரஸ் பறவைகள் அல்லது கடல் பாலூட்டிகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவக்கூடும். எனினும், மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவதில்லை என்றும் சிலி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.