இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணை!

K 4 Ballistic missile
K 4 Ballistic missile

நீர்மூழ்கி கப்பலில் இருந்து அணு ஆயுதங்களை கொண்டு இலக்குகளைத் தாக்கும் கே-4 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

ஆந்திர மாநில கடற்பகுதியில் இந்த சோதனை நடைபெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஏவுகணை 3,500 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளைத் துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய வல்லமை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நீருக்கு அடியில் இருந்து குறித்த ஏவுகணை ஏவப்பட்டு இந்த சோதனை இடம்பெற்றுள்ளது.

இந்திய பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பும் இணைந்து இந்த ஏவுகணையை உருவாக்கியுள்ளன.

கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.