சீனாவுடனான எல்லையை மங்கோலியா மூடியது

china border
china border

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து அந்நாட்டுடனான எல்லையை மங்கோலியா மூடியுள்ளது.

சீனாவின் அண்டை நாடான மங்கோலியா தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் பரவிவிடக்கூடாது என்பதற்காக சீனாவுடான எல்லையை மூடிவிட்டது. இதனால், சீனாவில் இருந்து வரும் வாகனங்கள் மங்கோலியாவுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மங்கோலியாவில் பாடசாலைகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதைத் தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் பொது நிகழ்ச்சிகளுக்கும் மங்கோலியா தடை விதித்துள்ளது.