நோயாளிகளை பராமரிப்பதற்காக தலைமுடியை வெட்டிய தாதி..

84575582 207645093739958 5332120104626814976 n
84575582 207645093739958 5332120104626814976 n

பெண் தாதி ஒருவர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான நோயாளிகளைப் பராமரிப்பதற்காகத் தனது தலைமுடியை வெட்டிய சம்பவம் ஒன்று நேற்று(27) சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் வுஹானைச் சேர்ந்த சான் சியா என்ற 30 வயதான பெண் தாதி ஒருவர் அங்குள்ள பல்கலைக்கழகத்தின் ரென்மின் வைத்தியசாலையில் பணியாற்றிவருகிறார்.

கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களைப் பராமரிப்பதற்கான நேரம் இன்மையால் தனது நீண்ட கூந்தலை வெட்டி தலையை மொட்டை அடுத்துள்ளார்.

குறித்த பெண் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸ் தொற்றை தவிர்ப்பதற்காக, பாதுகாப்பு ஆடைகளை அணியும் போதே அதிக நேரம் செலவாகின்றது.

அத்தோடு தனது நீண்ட கூந்தலை வாரினால் மேலும் அதிக நேரம் வீணாகி விடும் இந்த நேரத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளர்களை கவனிக்கமுடியும்.

இதனால் எனது நீண்ட கூந்தலை வெட்டி மொட்டை அடித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.