மகள் இருப்பதை ஒப்புக் கொண்டார் பெல்­ஜியத்தின் முன்னாள் மன்னர்

107143886 belgianroyalscombolowres
107143886 belgianroyalscombolowres

திருமணத்துக்கு அப்பாலான காதல் தொடர்பு மூலம் மகள் இருப்பதை பெல்­ஜிய முன்னாள் மன்னர் இரண்டாம் அல்பேர்ட் ஒப்புக்கொண்டார்.

பல வருட கால சட்டப் போராட்­டம் காரணமாக மர­பணுப் பரி­சோ­த­னைக்கு உட்­பட நிர்பந்திக்கப்பட்டதை அடுத்து அவர் இவ்­வாறு ஒப்புக்கொண்டுள்ளார் .

பெல்­ஜிய பெண் ஓவி­ய­ரான டெல்பைன் போயல் (51வயது) ஒரு தசாப்தத்திற்கு மேலாக பெல்­ஜிய முன்னாள் மன்­னரே தனது தந்­தை­யென சட்டப் போராட்டத்தை மேற்­கொண்டு வந்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் 2013 ஆம் ஆண்டு உடல் நலமின்மையால் ­ தனது பத­வியை இரண்டாம் அல்பேர்ட் துறந்­ததால் அவர் விசாரணைகளிலிருந்து விதிவிலக்கைப் பெறுவதற்கான தனது சிறப்­பு­ரி­மையை இழந்தார்.

இத­னை­ய­டுத்து அவ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட மரபணு பரிசோதனையில் அவரே டெல்பைனின் தந்தை என்பது நிரூபணமாகியுள்ளது.