இலங்கைக்கு கடத்த முயன்ற 75 ஆயிரம் ரூபா மதிப்பிலான கஞ்சா மெரைன் பொலிஸாரால் பறிமுதல்

IMG 20200130 WA0022
IMG 20200130 WA0022

இலங்கைக்கு கடத்தி செல்ல முற்பட்ட 75 ஆயிரம் ரூபா மதிப்பிலான கேரளா கஞ்சாவை மண்டபம் மெரைன் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்தியாவின் ராமேஸ்வரம் அருகே தனுஸ்கோடி சேரான் கோட்டை கடற்கரைப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கேரளா கஞ்சா கடத்த இருப்பதாக மெரைன் பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து கடலோர காவல் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது படகில் இருந்த நபர்கள் சுமார் 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை கடலில் வீசி விட்டு சென்றனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் சர்வதேச மதிப்பு 75 ஆயிரம் ரூபாய் என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து ராமேஸ்வரம், தனுஷ்கோடி மற்றும் கீழக்கரைப் பகுதிகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக ராமநாதபுரம் கடலோரப்பகுதிகளிலிருந்து போதைப்பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படுவது அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது