பறந்துகொண்டிருந்த விமானத்தில் பிறந்த குழந்தை

4 o v
4 o v

தாய்லாந்து நோக்கி பறந்து கொண்டிருந்த கட்டார் எயார்வேஸ் விமானத்தில் நடுவானில் பெண்ணொருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையொன்று பிறந்துள்ளதுள்ளது. இதையடுத்து விமான அவசரமாக விமானத்தை கொல்கத்தாவில் தரையிறக்கிய சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கட்டார் தலைநகர் டோகாவில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்கொக் நகருக்கு கட்டார் எயார்வேஸ் போஜிங் 777-300 ER என்ற விமானம் 352 பயணிகளுடன் புறப்பட்டு இன்று அதிகாலை இந்திய வான்பரப்பில் பறந்துகொண்டிருந்த போது விமானத்தில் இருந்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக செயற்பட்ட விமானப் பணிப்பெண்களின் உதவியுடன் அதிகாலை 3 மணிக்கு அழகான ஆண்குழந்தையொன்றை பெற்றெடுத்தார்.

இதையடுத்து விமானி SOS தகவல் மூலம் மருத்துவ தேவை என கட்டுப்பாட்டு கோபுரத்துக்கு இதுபற்றி அறிவித்தார். கட்டுப்பாட்டறை அனுமதியுடன் அதிகாலை 3.10 மணிக்கு விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. தாயும் , சேயும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து விமானம் மீள அதிகாலை 5.05 மணிக்கு பாங்கொக் நகருக்கு புறப்பட்டு சென்றது.

விமானத்தில் புதிய உறுப்பினரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என கடடார் எயார்வேஸ் விமான சேவை ருவிட்டரில் வாழ்த்தியுள்ளது.