7 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருக்கும் பல்லி

salamander athavannews 720x450
salamander athavannews 720x450

உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் சில ஆழ்கடலிலும் அடர்ந்த காடுகளிலும் உயிர்வாழ்கின்றன.

அவற்றில் சில வித்தியாசமான தோற்றத்திலும் தனக்கான தனிப்பட்ட இயல்புகளுடனும் காணப்படுகின்றன.

அதேபோல சாலமண்டர் வகை இனத்தைச் சேர்ந்த பல்லி ஒன்று, ஐரோப்பாவில் 7 ஆண்டுகளாக ஒரு அடிகூட நகராமல் ஒரே இடத்தை ஆட்கொண்டுள்ளது என ஆய்வறிக்கை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா நாட்டில் உள்ள குகை ஒன்றில் வாழும் ஓல்ம் என்று அழைக்கப்படும் ட்ராகன் போன்ற பல்லி, சுமார் 2 ஆயிரத்து 569 நாட்கள் நகராமல் ஒரே இடத்தில் இருந்துள்ளது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளை நிறத் தோல், வளர்ச்சியடையாத கண்களுடன் ஒரு அடி நீளம் கொண்ட இந்த வகை பல்லி இனம், 100 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை என ஆய்வாளர்களால் கூறப்படுகிறது.

இவ்வகை பல்லி இனமானது அதிக ஆண்டுகள் உணவின்றி, இருளில் உயிர் வாழுவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும், தனக்கான இணையை கண்டுபிடிப்பதற்காக மட்டும் இருப்பிடத்தை விட்டு இவை நகர்வதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.